உலகின் சக்திவாய்ந்த விமானப்படைகள் பட்டியல்: இந்தியா மீண்டும் 3-வது இடத்தில்
இந்திய விமானப்படை மீண்டும் உலக அரங்கில் தனது வலிமையை நிரூபித்துள்ளது. உலக நாடுகளின் விமானப்படைகளின் போர் திறன், நவீன விமானங்கள், தொழில்நுட்ப வசதிகள், செயல்பாட்டு திறன் மற்றும் ஒட்டுமொத்த ராணுவ தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்திய விமானப்படை மீண்டும் உலக அரங்கில் தனது வலிமையை நிரூபித்துள்ளது. உலக நாடுகளின் விமானப்படைகளின் போர் திறன், நவீன விமானங்கள், தொழில்நுட்ப வசதிகள், செயல்பாட்டு திறன் மற்றும் ஒட்டுமொத்த ராணுவ தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த சாதனையை இந்தியா தக்க வைத்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன. நவீன போர் விமானங்கள், உலகம் முழுவதும் விரைவாக செயல்படும் திறன் மற்றும் வலுவான ராணுவ கட்டமைப்பு ஆகியவை இந்த இரு நாடுகளையும் முன்னணியில் வைத்துள்ளன.
இந்திய விமானப்படையின் பலமாக ரஃபேல், சுகோய்-30 எம்.கே.ஐ., தேஜஸ், மிராஜ்-2000 உள்ளிட்ட போர் விமானங்கள் உள்ளன. அதோடு, எல்லைப் பாதுகாப்பு, வான்வழி கண்காணிப்பு, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான மீட்புப் பணிகளிலும் இந்திய விமானப்படை தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டிலேயே பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளும், புதிய தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளும் இந்திய விமானப்படைக்கு கூடுதல் வலிமையை அளித்துள்ளன. இதன் பலனாக உலகின் முன்னணி விமானப்படைகளுடன் இந்தியா தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக உலகின் முதல் மூன்று சக்திவாய்ந்த விமானப்படைகளில் இந்தியா இடம்பெற்றிருப்பது, நாட்டின் பாதுகாப்புத் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்திலும் இந்த முன்னேற்றம் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை பாதுகாப்புத் துறையில் நிலவுகிறது.
