மீண்டும் குழப்பம் : ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக ஈரான் அறிவிப்பு
மத்திய கிழக்கில் மீண்டும் குழப்பம் , உலகின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மறுஅறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது

மத்திய கிழக்கில் மீண்டும் குழப்பம் , உலகின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மறுஅறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது..
ஈரான் தரப்பின் விளக்கப்படி, அங்கீகரிக்கப்படாத பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் ஒரு சரக்குக் கப்பல் மீது எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை எந்தக் கப்பலுக்கும் ஜலசந்தி வழியாக அனுமதி வழங்கப்படாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வணிகக் கப்பலை காரணம் காட்டி ஈரான் இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது..
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கப்பல் போக்குவரத்து, எரிபொருள் விலை மற்றும் உலக வர்த்தகத்தில் இதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
