பள்ளிக்கரணையில் தனியார் பள்ளி வேனில் திடீர் தீ விபத்து – மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்குத் திரும்பியபோது சம்பவம்
பள்ளிக்கரணையில் தனியார் பள்ளி வேனில் திடீர் தீ விபத்து – மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்குத் திரும்பியபோது சம்பவம்

சென்னை, பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை பகுதியில் இன்று மாலை, மாணவர்களை அவர்களது வீடுகளில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பள்ளி வேனில் திடீரென புகை கிளம்பி, பின்னர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேனில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வெளியேறினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைவாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே வீடுகளில் இறக்கிவிடப்பட்டிருந்ததால் சேதம் ஏற்படவில்லை. வேன் பெருமளவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தால் பள்ளிக்கரணை–வேளச்சேரி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
