சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (செப். 11) அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்த நிலையில், ஒரு பவுனுக்கு ரூ.1,920 சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது.
22 காரட் தங்கம் விலை சரிவு
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனையாகிறது.
நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.880 உயர்ந்திருந்த நிலையில், இன்று குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது.
24 மற்றும் 18 காரட் தங்கத்தின் இன்றைய விலை
24 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.262 குறைந்து, 24 காரட் தங்கம் ரூ.15,289-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.11,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் ரூ.10,000 சரிவு
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,45,000 ஆக உள்ளது.
தங்கம் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, முதலீட்டாளர்களின் தங்கம் மீதான ஆர்வம் மற்றும் உலக பங்குச்சந்தைகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியா உலகின் முக்கிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருப்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் உள்நாட்டு தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார தாக்கங்களும் தங்கச் சந்தையின் போக்கில் எதிரொலித்து வருகின்றன.
இதனால், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.

