சென்னை : தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை நகரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்த நாட்களிலும் மழை தொடரும்
ஆகஸ்ட் 18-ம் தேதியும் சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 19-ம் தேதி சென்னையில் சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையத்தின் முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சில பகுதிகளில் லேசான மழையும், ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கவனமாக இருக்க அறிவுரை
மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வானிலை தொடர்பான புதிய அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், மழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும்.
குறிப்பு: இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வானிலை தகவல்கள் இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டவை.

