காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர் விஜய்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் இன்று தண்ணீர் திறக்கிறார். செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.

மேட்டூர்: காவிரி டெல்டா பகுதிகளின் பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று, அணையில் இருந்து பாசன நீரை திறந்து வைக்கிறார்.

செப்டம்பர் 1 முதல் அடுத்த 45 நாட்களுக்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு முதல்வர் விஜய் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூருக்கு சென்று, நண்பகலில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு மேட்டூர் அணைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அணையின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விளக்கப் புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் விஜய் பார்வையிட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் சேலம் விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

இதற்கிடையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளுக்கு தேவையான நீர் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.