சென்னை: Nothing நிறுவனத்தின் துணை பிராண்டான CMF, இந்திய சந்தையில் புதிய CMF Buds Neo வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. Active Noise Cancellation, Bluetooth 6.0 மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த இயர்பட்ஸ் ரூ.1,999 விலையில் வெளியாகியுள்ளது.
12.4mm Dynamic Driver
CMF Buds Neo-வில் Titanium-Coated PET Dome கொண்ட 12.4mm Dynamic Drivers வழங்கப்பட்டுள்ளன. AAC மற்றும் SBC Audio Codec ஆதரவுடன் Bluetooth 6.0 இணைப்பு வசதியும் இடம்பெற்றுள்ளது.
35dB Active Noise Cancellation
சுற்றுப்புற சத்தத்தை குறைக்க 35dB வரை Active Noise Cancellation வசதி வழங்கப்பட்டுள்ளது. Custom EQ மற்றும் Spatial Audio போன்ற ஆடியோ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
52 மணி நேர பேட்டரி பேக்கப்
இயர்பட்ஸில் தலா 45mAh பேட்டரியும், Charging Case-ல் 460mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ANC அணைக்கப்பட்ட நிலையில் இயர்பட்ஸ் மட்டும் 11 மணி நேரமும், Charging Case உடன் சேர்த்து 52 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
ANC இயக்கப்பட்ட நிலையில் இயர்பட்ஸ் 8 மணி நேரமும், Charging Case உடன் மொத்தம் 30 மணி நேரமும் பயன்படுத்த முடியும்.
10 நிமிட சார்ஜில் 5.5 மணி நேர பயன்பாடு
USB Type-C சார்ஜிங் வசதி கொண்ட CMF Buds Neo-வை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமிங் மற்றும் அழைப்புகளுக்கான அம்சங்கள்
கேமிங் பயன்பாட்டுக்காக Ultra-Low Latency Gaming Mode வழங்கப்பட்டுள்ளது. தெளிவான குரல் அழைப்புகளுக்காக ஒவ்வொரு இயர்பட்டிலும் தலா இரண்டு மைக்ரோஃபோன்கள் என மொத்தம் நான்கு மைக்ரோஃபோன்கள் இடம்பெற்றுள்ளன.
- Google Fast Pair
- Microsoft Swift Pair
- Dual Device Connectivity
- Touch Controls
- Nothing X App ஆதரவு
- Environmental Noise Cancellation
- Clear Voice Technology
தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு
இயர்பட்ஸுக்கு IP55 Dust & Water Resistance பாதுகாப்பும், Charging Case-க்கு IPX2 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. Black, White மற்றும் Dark Blue ஆகிய மூன்று நிறங்களில் இது கிடைக்கிறது.
விலை மற்றும் விற்பனை
CMF Buds Neo-வின் இந்திய விலை ரூ.1,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் Flipkart மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
குறைந்த விலையில் ANC, Bluetooth 6.0 மற்றும் 52 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை வழங்குவதால், CMF Buds Neo பட்ஜெட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் கவனம் பெறும் தயாரிப்பாக உள்ளது.

