கடலூர் சுகாதாரத்துறையில் 55 வேலைவாய்ப்புகள்: ரூ.63,000 வரை சம்பளம்; செப்.9 கடைசி நாள்

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் NHM திட்டத்தின் கீழ் 16 வகையான பணிகளுக்கு 55 காலியிடங்கள் அறிவிப்பு. ரூ.63,000 வரை சம்பளம். செப்.9 கடைசி நாள்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 வகையான பதவிகளில் 55 பணியிடங்கள் உள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2026 முதல் 09.09.2026 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

1. மருத்துவ அலுவலர் – Medical Officer

கல்வித் தகுதி:
Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MBBS அல்லது அதற்கு இணையான மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கட்டாய சுழற்சி பயிற்சியை (Compulsory Rotatory Internship) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.63,000/-

2. உதவி செவிலியர் – ANM

கல்வித் தகுதி:
மேல்நிலைத் தேர்ச்சி (HSC) பெற்றிருக்க வேண்டும். DME-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ANM Course அல்லது தொடர்புடைய Nursing Course முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 6
மாத சம்பளம்: ரூ.17,500/-

3. RBSK மருந்தாளுநர் – RBSK Pharmacist

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் D.Pharm படிப்பு முடித்திருக்க வேண்டும். Pharmacy Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.18,000/-

4. ஆய்வக நுட்புநர் – Laboratory Technician

கல்வித் தகுதி:
Intermediate (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Medical Laboratory Technology பிரிவில் Diploma அல்லது அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 3
மாத சம்பளம்: ரூ.17,000/-

5. ICTC / ஆய்வக நுட்புநர் – ICTC / Laboratory Technician

கல்வித் தகுதி:
Intermediate (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Medical Laboratory Technology பிரிவில் Diploma அல்லது அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.17,000/-

6. ICTC ஆலோசகர் – ICTC Counselor

கல்வித் தகுதி:
Master of Social Work (MSW) அல்லது B.Sc. Nursing படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.21,000/-

7. மிட் லெவல் சுகாதார வழங்குநர் – Mid Level Health Provider

கல்வித் தகுதி:
இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in General Nursing and Midwifery (DGNM) அல்லது B.Sc. Nursing படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 3
மாத சம்பளம்: ரூ.21,000/-

8. சுகாதார ஆய்வாளர் GR-II – Health Inspector GR-II

கல்வித் தகுதி:
பிளஸ் 2-வில் Biology அல்லது Botany மற்றும் Zoology பாடங்களைப் படித்திருக்க வேண்டும். SSLC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

மேலும், Multi-purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector தொடர்பான 2 ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 31
மாத சம்பளம்: ரூ.17,500/-

9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – Multi Purpose Hospital Worker

கல்வித் தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும், தமிழைத் தெளிவாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.11,000/-

10. ஓமியோபதி மருத்துவர் (PG Qualification)

கல்வித் தகுதி:
PG Degree பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய மாநில வாரியம் / கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். Tamil Nadu Board of Indian Medicine / TSMC / TNHMC உள்ளிட்ட தொடர்புடைய வாரியம் அல்லது கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.60,000/-

11. யோகா பயிற்றுநர் – Yoga Instructor

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BNYS Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.28,000/-

12. மருந்தாளுநர் (ஆயுஷ்) – Pharmacist (AYUSH)

கல்வித் தகுதி:
அரசு அங்கீகரித்த Indian Medicine Institution-ல் 2 ஆண்டு Pharmacist Course முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.20,000/-

13. மருத்துவ அலுவலர் (சித்தா) – Medical Officer (Siddha)

கல்வித் தகுதி:
SSLC, HSC மற்றும் தொடர்புடைய Degree பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய மாநில வாரியம் / கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.40,000/-

14. மருந்து வழங்குநர் (சித்தா) – Dispenser (Siddha)

கல்வித் தகுதி:
SSLC, HSC, D.Pharm (Ayush), Integrated Pharmacy Course ஆகியவற்றில் உரிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.18,000/-

15. சிகிச்சை உதவியாளர் (ஆண்) – Therapeutic Assistant (Male)

கல்வித் தகுதி:
SSLC, HSC மற்றும் Nursing Therapist Course முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு:
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.15,000/-

16. பல் மருத்துவர் – Dental Surgeon

கல்வித் தகுதி:
Dental Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரித்த தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 1
மாத சம்பளம்: ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் காலம்

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 22.08.2026 காலை 10.00 மணி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2026 மாலை 5.00 மணி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
05, பீச் ரோடு,
கடலூர்.

முக்கிய குறிப்பு

இப்பணியிடங்கள் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேவையான சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.