காஞ்சிபுரத்தில் சோகம் வேறு விளையாட்டு பகுதியில் இருந்து வந்த பந்து தாக்கி 11 வயது சிறுவன் உயிர் முடிவு

காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் சாய் மோகிஷ், அருகிலுள்ள மற்றொரு விளையாட்டு பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்து தலையில் பட்டதில் உயிர் முடிவு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் சோகம் வேறு விளையாட்டு பகுதியில் இருந்து வந்த பந்து தாக்கி 11 வயது சிறுவன் உயிர்முடிவு

காஞ்சிபுரம்: நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது அருகிலுள்ள மற்றொரு விளையாட்டு பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்து வேகமாக வந்து தலையில் பட்டதில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சிறுவன்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சாய் மோகிஷ், நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைதானத்தில் பலரும் வெவ்வேறு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

வேறு பகுதியில் இருந்து வந்த பந்து

சிறுவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மற்றொரு விளையாட்டு பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்து எதிர்பாராத விதமாக வேகமாக வந்து சாய் மோகிஷின் தலையில் பலமாக பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்து தாக்கியதில் சிறுவன் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயி..ழப்பு

மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சாய் மோகிஷ் உயி..ழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு மைதானங்களில் ஒரே நேரத்தில் பலர் விளையாடும்போது, அருகிலுள்ள பகுதிகளில் இருந்து வரும் பந்துகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.