சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 18) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள 17 மாவட்டங்கள்

நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.

வட தமிழகப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 4.5 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.