இரண்டாம் நிலை அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு முதல் நிலை முதல்வராக பதவி உயர்வு

GO 195-ன் அடிப்படையில் தமிழக அரசு இரண்டாம் நிலை அரசு கலைக் கல்லூரி முதல்வர்களை முதல் நிலை முதல்வர்களாக பதவி உயர்வு செய்து பணியமர்த்தியுள்ளது.

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை (நிலை) எண் 195-ஐத் தொடர்ந்து, கல்லூரிக் கல்வி ஆணையரகம் முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை அரசு கலைக் கல்லூரி முதல்வர்கள் முதல் நிலை அரசு கலைக் கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு பெற்று புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பணியிடங்களில் உடனடியாகப் பணியேற்க அறிவுறுத்தல்

பதவி உயர்வு பெற்ற முதல்வர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகளில் உடனடியாகப் பணியேற்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய கல்லூரிகளில் இருந்து உரிய முறையில் பணிவிடுவிப்பு வழங்கி, நிர்வாக நடைமுறைகளை விரைவாக நிறைவேற்றுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் அனுப்ப உத்தரவு

பதவி உயர்வு பெற்ற முதல்வர்களின் ஊதிய நிர்ணயத்திற்கான இசைவுக் கடிதம், பணியேற்பு அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணியேற்பு தொடர்பான அறிக்கைகள் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.