செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக். 6) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்குப்பதிவு
இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுராந்தகத்தில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களும், தாராபுரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
வேட்பாளர்கள் விவரம்
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கனிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இரு தொகுதிகளிலும் இன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.





