
நாளை மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம்: 50 சதவீத தொகுதி உயர்வு திட்டம்
நாடாளுமன்றம் நாளை நவம்பர் 30ஆம் தேதி மீண்டும் கூடும் நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்களவைத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்துவது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதா தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.











