
பரங்கிப்பேட்டை–முட்லூர் சாலையில் இருள்: மின்விளக்கு, CCTV கேமராக்கள் அமைக்க கோரிக்கை
பரங்கிப்பேட்டை ரயிலடி முதல் முட்லூர் வரையிலான சாலையில் இரவு நேர வெளிச்சத்தை மேம்படுத்த மின்விளக்குகள், CCTV கேமராக்கள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேடல் முடிவுகள்: "கடலூர் மாவட்டம்" (4 செய்திகள்)

பரங்கிப்பேட்டை ரயிலடி முதல் முட்லூர் வரையிலான சாலையில் இரவு நேர வெளிச்சத்தை மேம்படுத்த மின்விளக்குகள், CCTV கேமராக்கள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரத்தில் 16 வயது பள்ளி மாணவர் கவின்ராஜ் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். மாணவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் குடும்பத்தினருக்கோ காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புவனகிரி அருகே துணிசிரமேடு கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஞானசுந்தரி என்பவர் பரிதாபமாக உயிரி*ந்தார். மழை மற்றும் இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில், ஊழியர்கள் உள்ளே இருந்தபோது மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.